திருவாரூர் கமலாலய குளம் வெறிச்சோடியது


திருவாரூர் கமலாலய குளம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 8 Aug 2021 10:28 PM IST (Updated: 8 Aug 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஆடிஅமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதால் திருவாரூர் கமலாலய குளம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திருவாரூர்:
ஆடிஅமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதால் திருவாரூர் கமலாலய குளம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 
தர்ப்பணம் கொடுக்க தடை 
ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்புக்குரியது. இதில் புண்ணிய தீர்த்த தலமாகவும், பிறக்க முக்தி தரும் தலமான திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்தநிலையில் கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் ஆடி மாதம் வரும் இந்துக்களின் முக்கிய திருவிழாக்கள் மற்றும்  ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் ஆடி அமாவாசையையொட்டி அதிகளவில் மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. 
வெறிச்சோடிய கமலாலய குளம் 
அதன்படி கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தியாகராஜர் கோவில் உள்பட கோவில்கள் திறக்கப்படவில்லை. தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதால் கமலாலய குளத்தின் 4 கரைகளிலும் உள்ள வழிப்பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் கமலாலய குளம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தர்ப்பணம் கொடுக்க குளக்கரைக்கு  வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் முக்கிய புன்னிய தீர்த்த தலங்களில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது.
குடவாசல் 
குடவாசல் அருகே கூத்தனூர் செதலபதியில் முக்தீஸ்வரர் மற்றும் ஆதிவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆடி அமாவாசையன்று ெ்வளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முக்தீஸ்வரர் மற்றும் ஆதிவிநாயகர் கோவில்களில் ஆடிஅமாவாசையையொட்டி பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்தீஸ்வரர், ஆதிவிநாயகர் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.  இந்தநிலையில் ஆடி அமாவாசையையொட்டி மேற்கண்ட கோவில்களுக்கு  வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இங்கு கோவில்கள் மூடப்பட்டு இருந்ததாலும், தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதாலும் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
இதுகுறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், 
அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கப்படும் வகையில் கோவிலில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி வரை முக்தீஸ்வரர் கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் என்றார். 

Next Story