ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,836 லிட்டர் எரிசாராயம் அழிப்பு


ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,836 லிட்டர் எரிசாராயம் அழிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 11:04 PM IST (Updated: 8 Aug 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவின்பேரில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,836 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவின்பேரில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,836 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
எரிசாராயம் கைப்பற்றல்
மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த சின்னப்பிள்ளை மற்றும் ராமதுரை ஆகியோரின் வீட்டின் கொல்லைப்புறத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்து இருப்பதாக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்து இருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 54 பிளாஸ்டிக் கேன்களில் இருந்த 1,890 லிட்டர் எரிசாராயம் சிக்கியது. அவற்றை மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோபு மகன்கள் சுதாகரன் (வயது 24), சூர்யா (23), சிங்காரு மகன் சுந்தர்ராஜன் (39), புதுச்சேரி மாநிலம் குரும்பகரம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அம்பேத்வளவன் என்கிற சுந்தரமூர்த்தி (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
1,836 லிட்டர்  எரிசாராயம் அழிப்பு
அப்போது கைப்பற்றப்பட்ட எரி சாராயத்தில் தலா ஒரு லிட்டர் வீதம் 54 கேன்களில் இருந்து மாதிரிக்கு எடுத்து கோர்ட்டு உத்தரவின்படி தஞ்சாவூர் ராசாயன பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. மீதம் இருந்த 1,836 லிட்டர் எரிசாராயத்தை மயிலாடுதுறை 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல்கனி மேற்பார்வையிலும், மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா முன்னிலையிலும் மதுவிலக்கு போலீசார் எரிசாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இந்த எரிசாராயத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் என கூறப்பட்டது.

Next Story