சாராயம் கடத்திய ேவனை விரட்டி பிடித்த போலீசாருக்கு பாராட்டு


சாராயம் கடத்திய ேவனை விரட்டி பிடித்த போலீசாருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 8 Aug 2021 11:10 PM IST (Updated: 8 Aug 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

சாராயம் கடத்திய ேவனை விரட்டி பிடித்த போலீசாருக்கு பாராட்டு

கலவை

கலவையை அடுத்த சிறுவிடாகம் கிராமம் அருகில் ஓரிரு நாட்களுக்கு முன்பு போலீசார் இரவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வேகமாக வந்தது. அந்த வேனை நிறுத்தும்படி போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் வேன் நிற்காமல் வேகமாகச் சென்றது. 

உடனே இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, வேனை மடக்கி பிடிக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, தனிப்படை போலீசார் மணி, குமரன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். தனிப்படையினர் வாகனத்தில் விரட்டிச் சென்று ஓரிடத்தில் சரக்கு வேனை மடக்கினர். சரக்கு வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு அதில் இருந்து கீழே இறங்கிய 2 பேர் தப்பியோடி விட்டனர். போலீசார் சரக்குவேனில் சோதனைச் செய்தபோது, அதில் 3,500 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. சரக்கு வேனுடன் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் துணிச்சலான செயலை பாராட்டி ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், கலவை சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, தனிப்படை போலீசார் மணி, குமரன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கினார். 

Next Story