கார் மோதி ஓட்டல் தொழிலாளி பலி


கார் மோதி ஓட்டல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Aug 2021 11:24 PM IST (Updated: 8 Aug 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி ஓட்டல் தொழிலாளி பலியானார்.

அரவக்குறிச்சி
மதுரையை சேர்ந்தவர் கேசவன் (வயது 71). இவர் தனது தங்கை ஞானசவுந்தரியுடன் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஈசநத்தம் பிரிவு அருகே வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. அப்போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த ஓட்டல் தொழிலாளி விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன் (60) என்பவர் மீது கார் மோதியது. இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story