வேலூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 8 Aug 2021 11:40 PM IST (Updated: 8 Aug 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் கூறியதாவது:- 

பொதுமக்களின் வசதிக்காக 11 நிரந்தர தடுப்பூசி மையங்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதைத்தவிர தடுப்பூசிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் அதிகம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். இதுவரை சுமார் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. 22 ஆயிரம் தடுப்பூசி மருந்து தற்போது கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி செலுத்தாத நபர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதிகம் பேர் தடுப்பூசி போடாத பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பின்னர் அங்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story