பஸ் நிறுத்தத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
தேவகோட்டை அருகே பஸ் நிறுத்தத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தேவகோட்டை,
ராதிகா தேவகோட்டையில் உள்ள பஸ் நிலையம் அருகில் தையல்கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று தேவகோட்டை செல்ல வடுகனி பஸ் நிறுத்தத்தில் ராதிகா காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ராஜீவ்காந்தி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராதிகாவை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த அவரை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story