தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை. 5 நாட்கள் நடக்கிறது


தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை. 5 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 9 Aug 2021 12:19 AM IST (Updated: 9 Aug 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை. 5 நாட்கள் நடக்கிறது

வேலூர்

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திர விற்பனை தபால் நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,790 ஆகும். வேலூர் கோட்டத்தில் உள்ள வேலூர் தலைமை தபால் நிலையத்திலும், 47 துணை தபால் நிலையங்களிலும், 104 கிளை தபால் நிலையங்களிலும் தங்க பத்திர விற்பனை நடைபெறும். தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். ஒருவர் ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான்கார்டு கட்டாயம்.

 ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்டு ஆகியவற்றில் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்க பத்திரம் பெற்று கொள்ளலாம். 
இந்த தகவலை வேலூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கோமல்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story