மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 12:55 AM IST (Updated: 9 Aug 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதை கண்டித்தும், அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த கோரியும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜனதா அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் செய்யது அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் புகாரி, ராபியா, பத்தமடை கனி, ஹபிபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, ஆதி தமிழர் கட்சி ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மனித உரிமை அணி செயலாளர் முருகேசன், அசன் கனி, ஜவாஹிர், சங்கர் சம்சு, நாகராஜன், ஆதிமூலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story