யோகாசனத்தில் மாணவி சாதனை


யோகாசனத்தில் மாணவி சாதனை
x
தினத்தந்தி 9 Aug 2021 1:39 AM IST (Updated: 9 Aug 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரை சேர்ந்த மாணவி யோகாசனத்தில் சாதனை படைத்தார்.

விருதுநகர், 
விருதுநகர் பி.எஸ்.சி. ஆங்கிலப்பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவி ரதி (வயது 14). இந்த மாணவி சிறுவயது முதலே யோகா பயிற்சி பெற்றுவரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய அளவில் யோகா போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நேற்று இவர் பார்வையாளர்கள் முன்னிலையில் பத்மாசனமிட்டபடியே இரண்டு சுற்று நடந்து வந்தார். தொடர்ந்து பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச யோகா போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்பதே தனது எதிர்காலத் திட்டம் என மாணவி ரதி குறிப்பிட்டார்.

Next Story