கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 3:29 AM IST (Updated: 9 Aug 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்:
தமிழகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகளை கடைபிடிக்க வேண்டும், இந்து கோவில்கள் மட்டும் மூடப்பட்டு இருப்பது ஏற்க கூடியதல்ல. எனவே இந்து கோவில்களை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பேரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதே போன்று குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story