சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 7-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர்.
இதையடுத்து ரூ.8 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் 25 நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனர் ஆனந்தன், துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் மோகன்தாஸ்ரவி, கைத்தறி அலுவலர்கள் மகாராஜன், சலீம் அகமது மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story