செல்போனில் கேம் விளையாடியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் கேம் விளையாடியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம்:
செல்போனில் கேம் விளையாடியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா புன்வாசல் அருகே வள்ளந்தை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வினோதினி (20) என்பவரை திருமணம் செய்து கொண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விலாங்காட்டூர் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் சக்திவேல் செல்போனில் 'பிரிபையர்' விளையாட்டில் ஆர்வாக இருந்தார். இதனால் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் செல்போனில் இந்த விளையாட்டை விளையாடி வந்தாராம். இதற்கிடையே நேற்று முன்தினம் வேலைக்கு செல்லுமாறு வினோதினி, கணவர் சக்திவேலிடம் தெரிவித்தார். இருப்பினும் சக்திவேல் அதனை பொருட்படுத்தாமல் செல்போனில் பிரிபையர் விளையாடி கொண்டிருந்தாராம்.
விசாரணை
இதனால் கோபம் அடைந்த வினோதினி கணவரை கண்டித்ததாக தெரிகிறது. மனைவி தன்னை கண்டித்ததை நினைத்து வருந்திய சக்திவேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுத வினோதினி இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேலின் உடலை மீட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======
Related Tags :
Next Story