நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா பெண் பலி
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா பெண் பலி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் இறந்தார்.
53 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 590 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 588 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,641 ஆக அதிகரித்து உள்ளது.
பெண் சாவு
இதற்கிடையே நேற்று 49 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 46 ஆயிரத்து 596 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 589 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 455 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 52 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 456 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story