தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காங்கேயம்
அனைத்து மத்திய மாநில தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக காங்கேயம் பஸ் நிலைய வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் காங்கேயம் தாலுகா செயலாளர் கே.திருவேங்கடசாமி தலைமை தாங்கினார். இதில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும். ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியாருக்கு விற்கக்கூடாது. மக்களின் சொத்தான காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை திரும்ப பெறவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் பி.வேலுசாமி, ஏ.ஐ.டி.யு.சி. காங்கேயம் நகர பொறுப்பாளர் செல்லமுத்து, காங்கேயம் போக்குவரத்து பணியாளர் சங்க பொறுப்பாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்துகொண்டு கொடிகளை பிடித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
-
Related Tags :
Next Story