திருத்தணியில் பழங்குடியினர் 131 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள்


திருத்தணியில் பழங்குடியினர் 131 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 9 Aug 2021 4:37 PM IST (Updated: 9 Aug 2021 4:37 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி தாலுகாவை சேர்ந்த பாப்பிரெட்டிபள்ளி, காஞ்சி பாடி, ராஜா பத்மாபுரம், பெரிய களக்காட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 104 பழங்குடியினர் இன மக்களுக்கு சாதி சான்றிதழை அமைச்சர் வழங்கினார். மேலும் கே.என்.கண்டிகை, சூரியநகரம் கிராமங்களைச் சேர்ந்த 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மற்றும் தும்பிகுளம், கசவ ராஜபேட்டை கிராமங்களைச் சேர்ந்த 7 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆகியவற்றையும் அவர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் எம். சத்தியா, தாசில்தார் ஜெயராணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story