திருவண்ணாமலையில் மனித சங்கிலி போராட்டம்
திருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காந்தி சிலை பகுதியில் இருந்து தேரடி தெரு வரை நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
போராட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். மின்சார திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். வேலை நாட்களின் எண்ணிக்கையையும், குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்த வேண்டும்.
நகரங்களுக்கு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார்மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
அனைவருக்கும் கட்டணமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story