திருவண்ணாமலையில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 7:11 PM IST (Updated: 9 Aug 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் ஏ.சி.சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் சி.ஜெய்சங்கர் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரராஜா கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நியாயவிலை கடைகளுக்கு விற்பனை முனையம் ‘4ஜி சிம்’ வழங்க வேண்டும். பயோமெட்ரிக் முறையின் காரணமாக கொரோனா தொற்று பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையில் கண் விழித்திரை அடிப்படையில் விற்பனை செய்வதை ஆவண செய்ய வேண்டும். 

அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமானதாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story