ஸ்மார்ட் ரேஷன் கார்டு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது


ஸ்மார்ட் ரேஷன் கார்டு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 9 Aug 2021 8:08 PM IST (Updated: 9 Aug 2021 8:08 PM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் ரேஷன் கார்டு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது

கோவை

கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டதால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. 

ரேஷன் கார்டு உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில்கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் புதிய ரேஷன்கார்டு கேட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. 

தற்போது தமிழக அரசு, புதிதாக ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டது.

சமூக இடைவெளி

இதைத்தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

அதற்கான புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் சென்னை யில் அச்சடிக்கப்பட்டன. மொத்தம் 24 ஆயிரத்து 81 ரேஷன்கார்டுகள் கோவை வந்தன. 

அவை, அந்தந்த தாலுகாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

கோவை மாவட்டத்தில் நேற்று வரை 22,300 ஸ்மார்ட் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டு விட்டன.

இந்த நிலையில் நேற்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஸ்மார்ட்ரேஷன் கார்டு வாங்க 200-க்கும் மேற்பட்டோர் காலை 10 மணி அளவில் குவிந்தனர். 

இதனால் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட வில்லை.

கொரோனா அபாயம்

இது குறித்து தாசில்தார் அலுவலகத்திற்கு வேறு பணிகளுக்கு வந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

பொதுமக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஒரே சமயத்தில் வழங்கு வதாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் கூடுகிறது. 

அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் கொரோனா அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க கோவில்களை கூட அரசு மூடுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் சேரும் வகையில் அதிகாரிகளே கூட்டம் சேர்ப்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி கூறுகையில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கே கூட்டம் அதிகமாக இருக்கும். 

எனவே தாசில்தார் அலுவலகம் மூலம் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்
 வினியோகிக்கப்படுகிறது. 

கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்துக்கு சென்று விட்டு வர தாமதம் ஆனதால் நேற்று ஸ்மார்ட் கார்டு வாங்க பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்றார்.


Next Story