போக்சோவில் தொழிலாளி கைது


போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 9 Aug 2021 8:58 PM IST (Updated: 9 Aug 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மாணவியை திருமணம் செய்த தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர், 16 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். 

இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர், மாவட்ட சமூக நல விரிவாக்க அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 


சமூக நல விரிவாக்க அலுவலர் சவுந்தரலட்சுமி விசாரணை நடத்தியதில் மாணவிக்கு 16 வயதே ஆனது தெரியவந்தது. இது குறித்து அவர் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.


Next Story