77 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர்.
திருப்பூர், ஆக.10-
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர்.
77 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா 2வது அலை முடிவுக்கு வந்த நிலையில் 3வது அலை பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் நேற்று 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
5 பேர் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 596ஆக உள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 82 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 875ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 852 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 869-ஆக உயர்ந்துள்ளது. அரசு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Related Tags :
Next Story