வலங்கைமான் அருகே, குடமுருட்டி ஆற்றில் தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சீரமைப்பு
வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில் தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
வலங்கைமான்:-
குடமுருட்டி ஆறு
இதேபோன்று மறுகரையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தில்லையம்பூர் வாய்க்கால் தில்லையம்பூர், விசலூர், வேதப்பன் பேட்டை, நாகராசன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைந்து உள்ளது. இந்த 2 வாய்க்கால்களுக்கும் பாசன தண்ணீர் செல்லும் வகையில் சந்திரசேகரபுரம் பகுதியில் தடுப்பணை உள்ளது.
தற்காலிகமாக சீரமைப்பு
இதனால் சந்தன வாய்க்கால் மற்றும் தில்லையம்பூர் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வது கேள்விக்குறியானது. இதையடுத்து தடுப்பணையில் பொதுப்பணித் துறையினர் கருங்கல், மணல் உள்ளிட்டவற்றை கொண்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை செய்து உள்ளனர்.
இதன் காரணமாக 2 வாய்க்கால்களிலும் விவசாய தேவைக்கான தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story