விஷம் குடித்து முதியவர் தற்கொலை முயற்சி


விஷம் குடித்து முதியவர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 9 Aug 2021 9:59 PM IST (Updated: 9 Aug 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை முயன்றார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 70).இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்த தாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் ஆக்கிரமிப் பாளர்கள் காம்பவுண்ட் சுவர் கட்டி உள்ளார்களாம். இந்த சுவரை அகற்றி நிலத்தை மீட்டுத்தரக்கோரி பலரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. பல அதிகாரிகளை சந்தித்து மனு அளித்த நிலையிலும் யாரும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர் சுவரை அகற்றி தனது நிலத்தை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மனவேதனை அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயங்கி கிடந்த முதியவரை கண்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் நிலப் பிரச்சினையில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story