லாரி மீது கார் மோதி வாலிபர் பலி


லாரி மீது கார் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 Aug 2021 10:09 PM IST (Updated: 9 Aug 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

லாரி மீது கார் மோதி வாலிபர் பலியானார்

பரமக்குடி, 
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன உடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவர் லாரியில் ஆந்திராவில் இருந்து ஏர்வாடிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வந்துள்ளார். பரமக்குடி அருகே உள்ள பொது வக்குடி நான்கு வழி சாலையில் மேம்பாலம் அருகே வரும்போது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. அதில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூரை சேர்ந்த அகமது நிஜாமுதீன் (வயது22) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் டிரைவர் பெரிய பட்டிணத்தைச் சேர்ந்த பகத்ராஜா (33) என்பவர் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் எமனேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பின்பு காயம்பட்ட பகத் ராஜாவை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து லாரி டிரைவர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் எமனேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story