தேனி கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்


தேனி கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:13 PM IST (Updated: 9 Aug 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி:
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 33). இவருக்கும், தேனி மாவட்டம் சீலையம்பட்டியை சேர்ந்த தம்பித்துரை என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. 
இந்தநிலையில் கிருஷ்ணவேணி நேற்று தனது கைக்குழந்தையுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் ஒரு பையில் பிளாஸ்டிக் பாட்டிலில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்த அவர், மண்எண்ணெய் பாட்டிலை எடுத்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக கிருஷ்ணவேணியை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். 
பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், "எனது கணவர் என்னை பிரிந்து வாழ்கிறார். அவரை என்னுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. 
எனவே, தீக்குளிக்க வந்தேன். எனது கணவரை என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். பின்னர் அவரை போலீசார் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அறிவுரைகள் வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story