வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
பெரியகுளம், ஆண்டிப்பட்டியில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் முருகேசன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
பின்னர் அவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முருகேசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசகம் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சீனிவாசகம் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர் மது குடித்துவிட்டு வந்து, வீட்டில் தகராறு செய்தார்.
இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் சருத்துப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த சீனிவாசகம் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு உள்ள புளிய மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story