கந்திகுப்பம் அருகே புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற வேன் பறிமுதல்; 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


கந்திகுப்பம் அருகே புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற வேன் பறிமுதல்; 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Aug 2021 10:34 PM IST (Updated: 9 Aug 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பர்கூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், கிருஷ்ணகிரி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மறித்தனர். ஆனால் வேன் நிற்காமல் சாலையில் தாறுமாறாக ஓடியது. அந்த வேனை வாணியம்பாடி சோதனைச்சாவடியில் போலீசார் மடக்க முயன்றனர். ஆனால் வேன் டிரைவர் அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதிவிட்டு வேனை வேகமாக ஓட்டி சென்றார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பர்கூர், கந்திகுப்பம் போலீசார் வேனை பின் தொடர்ந்தனர். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் எதிரே வந்த மற்றொரு போலீஸ் வாகனத்தின் மீது மோதினார். தொடர்ந்து கந்திகுப்பம் அருகே பூங்குருத்தி வனப்பகுதியில் வேனை நிறுத்தி விட்டு அதிலிருந்த 7 பேரும் தப்பி சென்றனர். போலீசார் அந்த வேனில் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதும், அதை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story