பழக்கடையை உடைத்த கரடியால் பீதி
பழக்கடையை உடைத்த கரடியால் பீதி.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரில் பஸ்நிலையம், காம்பாய் கடை, ஹேப்பி வேலி, கார்சிலி சாலை, மாதா கோவில் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரத்திலும் கரடிகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் 2 கடைகளை உடைத்து உள்ளே புகுந்த கரடி, பழங்களை ருசித்து, விளக்கில் இருந்த எண்ணெய்யை குடித்து விட்டு சென்றது. பின்னர் பஸ்நிலையம் அருகே உள்ள புதருக்குள் சென்று பதுங்கிய அந்த கரடி, மீண்டும் மதியம் வெளியே வந்தது.
அப்போது பொதுமக்கள் கூச்சலிட்டதால், உடனே புதருக்குள் சென்று பதுங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் புதரில் இருந்து வெளியே வந்த கரடி, பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடையை உடைத்து உள்ளே புகுந்து பலாப்பழத்தை வெளியே எடுத்து வந்து சுவைத்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். கரடியின் தொடர் அட்டகாசத்தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
Related Tags :
Next Story