திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க காத்திருந்த பொதுமக்கள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கும்.
கொரோனா பரவலால் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், திங்கட்கிழமையான நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பொதுமக்களின் வசதிக்காக மனு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பெட்டியில் பொதுமக்கள் தங்களின் மனுக்களை போட்டுச் சென்றனர்.
Related Tags :
Next Story