விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 11:19 PM IST (Updated: 9 Aug 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி உள்ளது. இங்கு விவசாய பயிர்க்கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

இதனால் வங்கி செயலாளர் மற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வங்கி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கவுரவ தலைவர் கடைகம்பட்டியை சேர்ந்த பெள்ளன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வங்கி செயலாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மேலும் அவர் உள்பட ஊழியர்களை இடமாற்ற வேண்டும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நிர்வாக குழுவை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முடிவில் பொது செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Next Story