பம்புசெட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல். வாலிபர் கைது
பம்புசெட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல். வாலிபர் கைது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியில் அதடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது விவசாய நிலத்தில் உள்ள பம்புசெட்டிலிருந்து வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் புள்ளானேரி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சிவாஜி (வயது 38) என்பதும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பல்வேறு கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்ய பதுக்கி இருந்ததும் தெரியவந்தது. பம்புசெட்டில் நடத்திய சோதனையில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செயது சிவாஜியை கைது செய்தனர். இதன் மதிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story