நெமிலியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெமிலியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய மின்திட்டத்தை கைவிடக் கோரியும், பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பதை கைவிடக் கோரியும் மற்றும் பொது மக்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு விசைத்தறி சம்மேளன மாநிலத் துணைச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தினர், நெசவாளர் சங்கத்தினர், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கே.சிவக்குமார், சி.துரைராஜ்,. சீனிவாசன், ராஜா மற்றும் துய்மை பனியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story