வேலூரில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
வேலூர்
வேலூர் ரங்காபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் பக்தகுமார் (வயது 65), கட்டிட ஒப்பந்ததாரர். இவர் கடந்த 5-ந் தேதி வேலை நிமித்தமாக வெளியூர் சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்தகுமாரின் வீட்டிற்கு அவருடைய அண்ணன் மகள் ரெசிமா சென்றார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் வளையல், ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து ரெசிமா செல்போனில் சித்தப்பா பக்தகுமாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் திருட்டு குறித்து ரெசிமா சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிரு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story