பந்தலூரில் பலத்த மழை
பந்தலூரில் பலத்த மழை.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சேரம்பாடி அருகே கோரஞ்சால் திருவள்ளுவர் நகரில் சாலையிலும், சிறு பாலத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அங்குள்ள தடுப்புச்சுவர் இடிந்து, சேகர் என்பவரது வீட்டின் சமையல் அறை மீது விழுந்தது. இதனால் வீடு சேதம் அடைந்தது. இதேபோன்று நெல்லிக்குன்னு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரது வீட்டின் அருகில் சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மண்சரிவு வீட்டின் மீது விழுந்ததால், மேற்கூரை சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் குப்புராஜ், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, பாதிப்புகளை பார்வையிட்டனர்.
அப்போது தடுப்புச்சுவர்களை சீரமைத்து, சேதம் அடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story