மானாமதுரை,
மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில் வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்ய சென்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நில அளவையாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தும், கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஒன்று கூடியதாக கல்குறிச்சியை சேர்ந்த சிவாஜி, முத்துராமன், போதும் தம்பி, சுப்பையா, ராஜா உள்பட 10 பேரும் மேலும் சிலர் மீதும் செய்களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் புகார் கொடுத்தார். இதன் பேரில் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.