சிமெண்டு மூட்டைகள் திருடிய 2 பேர் கைது
சுத்தமல்லியில் கடையில் சிமெண்டு மூட்டைகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
சுத்தமல்லி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முகம்மது ஷாலி (வயது 48). இவர் சுத்தமல்லி விலக்கில் சிமெண்டு, ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கொண்டாநகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அஜித் (23), அதே பகுதியை சேர்ந்த ராஜா மைதீன், பெரியார் நகரை சேர்ந்த சஞ்சய் என்ற மோகன்பாபு (40) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். நடத்தை சரியில்லை என்ற காரணத்தால் சஞ்சய், ராஜா மைதீனை கடையின் உரிமையாளர் வேலை நிறுத்தம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்த முகம்மது ஷாலி அங்கிருந்த 20 சிமெண்டு மூட்டைகள் திருடு போயிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். இதில் அஜித், ராஜா மைதீன், மோகன் பாபு ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக அஜித், மோகன்பாபு ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து சிமெண்டு மூடைகளை பறிமுதல் செய்தனர். ராஜா மைதீனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story