விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2021 12:50 AM IST (Updated: 10 Aug 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள கத்தாளபட்டி பகுதி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45), விவசாயி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4-ந்தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில், அவருடைய மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த பெருமாள் பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெருமாள் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story