சட்டப்படிப்பு மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது


சட்டப்படிப்பு மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2021 12:59 AM IST (Updated: 10 Aug 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே சட்டப்படிப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

சிவகங்கையை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் சட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சிவகங்கை காமராஜர் காலனியில் உள்ள பாரத்லால் (வயது 25) என்பவரின் போட்டோ ஸ்டூடியோவிற்கு சென்றார். அப்போது பாரத்லால் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.அதை குடித்து மயங்கிய மாணவியை பாரத்லால் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அத்துடன் அவரை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த படத்தை காட்டி அந்த மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார்.அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் பாரத் லால் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.


Next Story