கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடக்கம்
நெல்லையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கியது.
நெல்லை:
கல்லூரிகளில் ஆசிரிய, ஆசிரியைகள் பணிக்கு வந்தனர். மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. இதை அவர்கள் ஆர்வத்துடன் கவனித்து படித்தனர்.
கொரோனா பரவல்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகள் நடைபெறவில்லை. கடந்த கல்வியாண்டில் தேர்வுக்கு முன் இரண்டாம் அலை பரவல் காரணமாக கல்விப்பணிகள் முடங்கின. இரண்டாம் அலை பரவல் குறைந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் உயர் கல்வித்துறை உத்தரவுப்படி நேற்று முதல் ஆன்லைனில் நடைபெற தொடங்கியது.
ஆன்லைன் வகுப்புகள்
இதற்காக அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் நேரில் கல்லூரிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் கல்லூரிக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் பாடத்தை கவனித்தனர்.
கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.
Related Tags :
Next Story