கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Aug 2021 1:10 AM IST (Updated: 10 Aug 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை.
அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். நேற்றும் ஏராளமான பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்.

மாற்றுத்திறனாளி

சேரன்மாதேவி அருகே ஓமநல்லூரைச் சேர்ந்த இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி ஆறுமுகம் (வயது 51) என்பவரும் நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தவிழ்ந்தவாறு மனு கொடுக்க சென்றார். பிளாஸ்டிக் கேனில் மண்எண்ணெய் வைத்திருந்த அவர், தனது நிலத்தை சகோதரர்களும், தந்தையும் அபகரித்து விட்டனர், அதனை மீட்டுத்தர வேண்டும், இல்லையெனில் தீக்குளிக்கப் போவதாக கூறினார்.
அப்போது கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஆறுமுகத்திடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவரை மனு கொடுப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.

Next Story