தொழிற்சங்கத்தினர் மனிதசங்கிலி போராட்டம்


தொழிற்சங்கத்தினர் மனிதசங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2021 1:14 AM IST (Updated: 10 Aug 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தொழிற்சங்கத்தினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

நெல்லை:
ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளையொட்டி 'இந்தியாவை பாதுகாப்போம்' என்ற பெயரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டையில் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு இருந்து போராட்டம் தொடங்கியது. தொ.மு.ச அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். மேலும் வண்ணார்பேட்டை பகுதிகளில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன், இணைச் செயலாளர் முருகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சடையப்பன், எச்.எம்.எஸ். மாநில தலைவர் சுப்பிரமணியன், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ராமசாமி, ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்ட செயலாளர் கணேசன், டி.டி.எஸ்.எப். மாவட்ட செயலாளர் சந்தானம், பேச்சாளர் நெல்லை கண்ணன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story