கர்நாடகத்தில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 192 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 19 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,776 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 59 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. 23 ஆயிரத்து 316 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
பெங்களூரு நகரில் 296 பேர், தட்சிண கன்னடாவில் 273 பேர், மைசூருவில் 82 பேர், உடுப்பியில் 81 பேர், குடகில் 83 பேர், ஹாசனில் 54 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் ஒருவரும், கோலார், உடுப்பி, தட்சிண கன்னடாவில் தலா 3 பேரும், துமகூரு, உத்தரகன்னடா, தார்வார், ஹாசனில் தலா 2 பேரும் என மொத்தம் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story