100 சதவீதம் தடுப்பூசி போட்ட கிராமத்துக்கு விருது- கலெக்டர் வழங்கினார்


100 சதவீதம் தடுப்பூசி போட்ட கிராமத்துக்கு விருது- கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Aug 2021 1:56 AM IST (Updated: 10 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் தடுப்பூசி போட்ட கிராமத்துக்கு, தென்காசி கலெக்டர் விருது வழங்கினார்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு வாரம் நடைபெற்றது. இதன் இறுதி நாளில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிக்கு பரிசு வழங்கப்பட்டது. தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தில் 1022 பேரும், திருவேங்கடம் பேரூராட்சியில் 8,9,10 ஆகிய வார்டுகளில் 619 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது 100 சதவீதம் ஆகும். எனவே தென்காசி பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவ குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் பரிசு வழங்கினார். இதேபோன்று திருவேங்கடம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மருத்துவ குழுவினருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார துறை உதவி திட்ட மேலாளர் டாக்டர் கீர்த்தி, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், மாவட்ட கொள்ளை நோய் நிபுணர் டாக்டர் தயாளன், சுகாதார துறை நிர்வாக அலுவலர் சந்திரதாஸ், நல கல்வியாளர் ஆறுமுகம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story