பெங்களூருவில் தமிழக கட்டிட மேஸ்திரி ஆயுதங்களால் தாக்கி கொலை


பெங்களூருவில் தமிழக கட்டிட மேஸ்திரி ஆயுதங்களால் தாக்கி கொலை
x
தினத்தந்தி 10 Aug 2021 2:05 AM IST (Updated: 10 Aug 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தமிழக கட்டிட மேஸ்திரியை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறாா்கள்.

பெங்களூரு:

தமிழக மேஸ்திரி கொலை

  தமிழ்நாட்டை சேர்ந்தவர் கரண் (வயது 32). இவர், கட்டிட மேஸ்திரி ஆவார். பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அங்கு கட்டிட மேஸ்திரியாக கரண் வேலை பார்த்து வந்தார். அந்த கட்டிடத்தின் அருகேயே சிறிய கூடாரம் அமைத்து அவர் தங்கி இருந்து வேலை செய்தார்.

  நேற்று முன்தினம் இரவு அவர் சாப்பிட்டு தன்னுடைய கூடாரத்தில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் கூடாரத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், கரணை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் சென்று விட்டனர்.

மர்மநபர்களுக்கு வீச்சு

  நேற்று காலையில் கரண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கரண் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கரணை, அவருக்கு நெரிந்த நபர்களே கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  ஆனால் கரணை கொலை செய்த நபர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற சரியான கரணம் தெரியவில்லை. இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story