மாவட்ட செய்திகள்

வீடுகளில் பதுக்கப்பட்ட 572 கிலோ புகையிலை பொருட்கள்- ரூ.1½ லட்சம் பறிமுதல் + "||" + 572 kg of tobacco products stored in houses - Rs. 10 lakh confiscated

வீடுகளில் பதுக்கப்பட்ட 572 கிலோ புகையிலை பொருட்கள்- ரூ.1½ லட்சம் பறிமுதல்

வீடுகளில் பதுக்கப்பட்ட 572 கிலோ புகையிலை பொருட்கள்-  ரூ.1½ லட்சம் பறிமுதல்
வீடுகளில் பதுக்கப்பட்ட 572 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவர் அரியலூரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொடுத்த போது, அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வெளி மாவட்டத்தில் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கி பொய்யாதநல்லூரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அரியலூர் போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 500 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், குபேந்திரன் மற்றும் பரூக் ஆகியோரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என பாப்பாங்குளம் கிராமத்தில் ஒரு வீட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாப்பாங்குளம் கிராமத்தில் சபி என்பவரது வீட்டில் சுமார் 72 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து, அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. மைசூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.30½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
மைசூரில் இருந்து திருச்சிக்கு காய்கறி மூட்டைகளுக்கு அடியில்வைத்து கடத்தப்பட்ட ரூ.30½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. 840 கிலோ புகையிலை பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு
பெங்களூருவில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ புகையிலை பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
4. ஓசூரில் நடந்த வாகன சோதனையில் காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது
கர்நாடகாவில் இருந்து வேலூருக்கு காரில் கடத்திய புகையிலை பொருட்களை ஓசூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5. புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
வேடசந்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.