மாவட்ட செய்திகள்

மொபட்டில் மணல் கடத்திய வாலிபர் கைது + "||" + Youth arrested for smuggling sand in moped

மொபட்டில் மணல் கடத்திய வாலிபர் கைது

மொபட்டில் மணல் கடத்திய வாலிபர் கைது
மொபட்டில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் நேற்று தனது உதவியாளருடன் கோடாலிகருப்பூர் கொள்ளிடக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் கோடாலிகருப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் மோகன்தாஸ் (வயது 20) என்பதும், அனுமதியின்றி மொபட்டில் 3 மூட்டைகளில் மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து தா.பழூர் போலீசில் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள், 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்; 6 பேர் மீது வழக்கு
கறம்பக்குடி, திருப்புனவாசல் பகுதிகளில் மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள், 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. மணல் கடத்தியவர் கைது
மணப்பாறை அருகே மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
3. மணல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல்; டிரைவர் கைது
மணல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4. மணல் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்
மணல் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
5. கடலூர் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகை
கடலூர் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.