மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும்; பசவராஜ் பொம்மை நம்பிக்கை
மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மைசூரு:
தமிழகம் எதிர்ப்பு
ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 அயிரம் கோடி செலவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது.
ஆனால் அந்த அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார் என்று மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் 2 மாநிலங்களும் மத்திய அரசிடம் தங்களது சாதக, பாதங்களை எடுத்து கூறி வருகின்றன. மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறி உள்ளார்.
முதல்-மந்திரி சாமி தரிசனம்
இந்த நிலையில் ஒரு நாள் சுற்றுப்பயணமாக மைசூருவுக்கு நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வந்தார். ைமசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளிக்கையில் கூறியதாவது:-
தமிழகம் அரசியல் செய்கிறது
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்து உள்ளோம். அந்த அறிக்கையை பரிசீலனை செய்து அணை கட்ட மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதனால் மேகதாதுவில் அணை கட்டப்படுவது உறுதி. அணையை கட்டுவதற்கு ேதவையான அனைத்து வழிமுறைகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் தண்ணீர் விஷயத்தில் எப்போதும் அரசியல் செய்து வருகிறது.
மத்திய மந்திரிகளிடம் பேச்சு
காவிரி நதிநீர் விஷயத்திலும் தமிழகம் அரசியல் செய்தது. தற்போது மேகதாது அணை விவகாரத்திலும் தமிழகம் அரசியல் செய்கிறது. இந்த அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம். அணையை கட்டியே தீருவோம்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவேன். அப்போது அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பு பற்றியும், இந்த திட்டத்தின் உண்மை நிலையையும் எடுத்து கூறுவேன்.
அரசியல் இல்லை
மேலும் இந்த விவகாரத்தில் சட்டகுழுவினருடன் ஆலோசனை மேற்கொள்வேன். காவிரி படுகைகளில் உபாிநீரை கர்நாடகம் பயன்படுத்துவது குறித்து நீரப்்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் சட்ட நடவடிக்கை எடுப்பார்.
இந்த அணை திட்டம் முழுக்க, முழுக்க விவசாயிகள் நலனுக்கானது. இதில் அரசியல் இல்லை. மேகதாது பல்நோக்கு திட்டம்(அதாவது குடிநீர் மற்றும் மின்சாரம் தயாரிக்க). இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story