புரளியால் பரபரப்பாக காணப்பட்ட போலீசார்


புரளியால் பரபரப்பாக காணப்பட்ட போலீசார்
x
தினத்தந்தி 10 Aug 2021 2:09 AM IST (Updated: 10 Aug 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் ஒருவர் வருவதாக கிடைத்த புரளியால் போலீசார் பரபரப்பாக காணப்பட்டனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கேனுடன் ஒருவர் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பரபரப்பாக காணப்பட்டனர். மேலும் பொதுமக்கள் கொண்டு வந்த உடமைகளை தீவிர சோதனையிட்ட போலீசார், அவர்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலையும் விட்டு வைக்கவில்லை. அதனை முகர்ந்து பார்த்து தண்ணீரா அல்லது மண்எண்ணெயா என்று சோதித்தனர். ஆனால் மண்எண்ணெய் கேனுடன் எந்த நபரும் வரவில்லை. கிடைத்த தகவல் புரளி என்று தெரிந்தபிறகே போலீசார் நிம்மதி அடைந்தனர்.

Next Story