வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி மனித சங்கிலி போராட்டம்
வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாளையொட்டி நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 புதிய வேளாண் சட்டங்களை கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த கோரியும், பொதுத்துறையை, தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story