புள்ளம்பாடியில் 19 பவுன் நகைகள் திருட்டு


புள்ளம்பாடியில் 19 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 10 Aug 2021 2:24 AM IST (Updated: 10 Aug 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

புள்ளம்பாடியில் 19 பவுன் நகைகள் திருட்டு போயின

கல்லக்குடி
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் தர்மராஜ் (வயது 63). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் துறையூர் அருகே உள்ள பச்சைமலை ஆகும். இவர் புள்ளம்பாடி பகுதியில் பணிபுரிந்த காரணத்தால் இங்கேயே வீடு கட்டி மனைவி மகள் மருமகன் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான துறையூருக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து அன்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் சாமி அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பீரோ மற்றும் இரும்பு பெட்டி திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த  19 பவுன் நகைகள், ரூ.47 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தன. இதுகுறித்து கல்லக்குடி போலீசாருக்கு தர்மராஜ் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story