நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து


நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 10 Aug 2021 2:28 AM IST (Updated: 10 Aug 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது

சமயபுரம்
மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தீபன்ராஜ் (வயது 25). பெயிண்டர். மண்ணச்சநல்லூர் முதலியார் சந்து பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 34). பிளம்பர். இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமார், தீபன்ராஜ் வயிற்றில் கத்தியால் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீபன்ராஜின் நண்பர்கள் சதீஷ்குமாரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story